உலகம் முழுவதும் அநேகம் பேர் டார்க் சாக்லேட்டை விரும்பி உட்கொண்டு வருகின்றனர். பலர் உணவுக்குப் பின் ஒரு துண்டு டார்க் சாக்லேட்டை வாயில் போட்டுக் கொள்ளத் தவறுவதில்லை.
டார்க் சாக்லேட் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. டார்க் சாக்லேட் ஒரு அருமையான மன அழுத்த நிவாரணியாகும். டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த இருதய செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
இதனை அளவோடு எடுத்துக்கொண்டால் உடலுக்கு நன்மைகள் தரும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு ஆபத்துக்கள் ஏற்படும்.
டார்க் சாக்லேட் தீமைகள்
சாக்லேட்டில் நிறைய கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளது. இதை உட்கொள்வது நீரிழிவு, முகப்பரு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
அதிகப்படியான சாக்லேட் உட்கொள்வதால் வயிற்று உப்புசம், மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.