பேக்கிங் சோடாவை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

பல வகையான கேக்குகள், பிரெட், பேக்கரி பொருட்களில் பேக்கிங் சோடா சேர்க்கப்படுகிறது. பேக்கிங் சோடாவை குறைந்த அளவில் உட்கொண்டால் எந்த பிரச்சனையும் இருக்காது. அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

பேக்கிங் சோடாவை அதிகம் சேர்த்துக்கொண்டால் உங்கள் வயிற்றில் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். நாம் சோடாவை உட்கொள்ளும் போதெல்லாம், அது ஒரு இரசாயன செயல்முறையின் கீழ் அமிலத்துடன் கலக்கிறது. ஆகையால், எப்போதும் பேக்கிங் சோடாவை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

அதிக அளவு பேக்கிங் சோடாவை உட்கொள்வது மாரடைப்புக்கு வழிவகுக்கலாம். அல்லது இதயத்தின் துடிப்பில் இதனால் தடை ஏற்படலாம்.

பேக்கிங் சோடாவை தொடர்ந்து உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் ஆகும். இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியம் பைகார்பனேட் இதில் அதிகளவில் உள்ளது.

பேக்கிங் சோடாவில் உள்ள பாஸ்போரிக் அமிலம் எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு பேக்கிங் சோடா பயன்படுத்தினால் சருமம் சிவந்து, தடிப்புகள் உடன் எரிச்சலை உண்டாக்கலாம் சருமம் மிகவும் வறண்டு போய்விடும்.

Recent Post

RELATED POST