தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன.

தினமும் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் குறைந்தது 30-50மிலி பாகற்காய் சாற்றை அருந்துவது மிகவும் சிறந்தது.

பாகற்காயை சாப்பிடுபவர்களுக்கு முகத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை எளிதில் நீங்கும்.

பாகற்காய் சாப்பிடுபவர்கள் உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டப்பட்டு உணவு நன்றாக செரிமானம் ஆகச் செய்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் மட்டும் உணவில் இருந்து எடுக்கப்பட்டு வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

Recent Post

RELATED POST