நெடுஞ்சாலைகளில் நீங்கள் பயணம் செய்யும் போது சாலையின் நடுவே செவ்வரளி செடிகள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதனை ஏன் வைத்துள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
நெடுஞ்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் இருந்து கார்பன் நச்சுக்கழிவு அதிகளவு வெளியேறும். இந்த நச்சுக்கழிவை காற்றில் உறிஞ்சி தூய ஆக்சிஜனாக மாற்றித்தரும் பண்பு தாவரங்களுக்கு உண்டு.
குறிப்பாக இந்த பண்பு செவ்வரளி செடிக்கு அதிகமாகவே உள்ளது. இதனுடைய இலைகள் அடர்த்தியாக இருப்பதால் இது காற்றில் உள்ள கார்பன் கழிவை எளிதில் உள்வாங்கும்.
மண் அரிப்பை கட்டுப்படுத்துவதிலும், இரைச்சல் மாசுவை கட்டுப்படுத்துவதிலும் செவ்வரளி செடி முக்கியப் பங்கு வகிக்கிறது.
செவ்வரளி பொதுவாகவே வறண்ட பகுதிக்கு ஏற்ற தாவரமாகும். இதனை யாரும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் தான் நெடுஞ்சாலை ஓரங்களில் செவ்வரளி செடிகள் வளர்க்கப்படுகின்றன.