கோவிலில் உள்ள நந்தியை எப்போது வணங்கலாம்? வணங்குவது எப்படி?

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். சிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள்.

கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் நந்தியின் மூச்சுக் காற்று கருவறை சிவலிங்கம் மீது பட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

Also Read : வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதனால் கிடைக்கும் நன்மைகள்

கோவிலுக்குள் சென்ற பிறகு முதலில், கோவில் வாயிலில் உள்ள விநாயகரை வணங்க வேண்டும். விநாயகரை வணங்கிய பின், நந்தி மண்டபத்திற்கு செல்லுங்கள். நந்தியின் பின்புறம் சென்று, அதன் வால் பகுதியை முதலில் வணங்குங்கள்.

பிறகு நந்தியின் வலது காதுக்கு அருகில் சென்று “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். நந்திக்கு முன்பு நெய் தீபம் ஏற்றி பூக்கள் மற்றும் வில்வ இலைகளை வைத்து வணங்க வேண்டும். பிறகு நந்தியை வலது பக்கமாக ஒரு முறை வலம் வரவும். கடைசியாக உங்கள் வேண்டுதலை கூறி வணங்க வேண்டும்.

நந்தியின் கொம்புகள் மற்றும் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். பிரதோஷ காலத்தில் நந்தியை வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

Recent Post