விரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

விரதம் கடைபிடிக்கும் வழக்கம் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இன்றைய தலைமுறையினர் பலர் உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் விரதம் இருக்கிறார்கள். 

விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்

விரதம் இருப்பதால், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் குறையும். இது உடல் தன்னைத் தானே சுத்தப்படுத்தவும், உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் அகற்றவும் உதவுகிறது. விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பை எளிமையாக குறைக்கலாம்.

விரதம் இருப்பதால் செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படத் தொடங்கும். இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

விரதம் மேற்கொள்வதால் அது சிறுநீர், மலம் போன்ற உடல் கழிவுகளை நீக்கிவிடும். மேலும், உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும்.

விரதம் இருப்பதால் ரத்த நாளங்களில் படியும் கொழுப்புகள் குறைந்து மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும். 

விரதம், மாதம் 1 முறை கடைபிடிக்கலாம், அதற்கு மேல் எடுத்தால் சில பக்க விளைவுகளும் ஏற்படும். பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் விரதத்தை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

Recent Post