சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் குளிர் காலத்தில் பொதுவாக மக்களை பாதிக்க கூடிய நோய்களில் ஒன்று. இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். அதற்கான உணவுகளில் ஒன்றாக நெல்லிக்காய் இருக்கிறது.
கசப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளை கொண்ட நெல்லிக்காய்க்கு, நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் இருக்கிறது. இந்த நெல்லிக்காயை நீங்கள் தினசரி சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை நாம் குளிர் காலத்தில் எடுத்துக்கொண்டால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களில் இருந்து விடுபடலாம்.
நெல்லிக்காய் நமது உடலின் இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வரும்.
நெல்லிக்காய் நம் உடலில் செல்கள் பாதிப்பு அடைவதை கட்டுப்படுத்துகிறது. தினசரி தேன் நெல்லி சாப்பிட்டு வர, நமது சருமம் இளமையாக தோன்றும்.
குளிக்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து சளி, இருமல் போன்ற நோய்களை வராமல் தடுக்கிறது.