சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் வரலாறு

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் சென்னை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் பல நூற்றாண்டுகளாக பழமை வாய்ந்தது. இங்குள்ள இறைவன் “காரணீஸ்வரர்” என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இது நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

இக்கோவிலில் கிழக்கு நோக்கியவாறு இறைவன் காட்சிதருகிறார். முருகர் சன்னதி .சனீஸ்வரர் சன்னதி, பழனி ஆண்டவர், ஆஞ்சநேயர், வீரபத்திரர் மற்றும் நவகிரகங்கள் இக்கோவிலில் உள்ளது. மேலும் உள் சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சிணாமூர்த்தி, திருமால், சண்டீகேஸ்வரர், துர்க்கை, பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. 

Also Read : கோவளம் கைலாசநாதர் கோவில் வரலாறு

இக்கோவிலில் ஆனியில் திருமஞ்சனம், சித்திரையில் கொடியேற்றம், ஐப்பசியில் கந்தசஷ்டி, மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தையில் தெப்பம் என்று ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும்.

செல்லும் வழி :
சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு  அருகில் இக்கோயில் உள்ளது . சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் இறங்கி ஜோன்ஸ் சாலை வழியாக சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது .

திறந்திருக்கும் நேரம் :
காலை 6 . 00 மணி முதல் 11 .00  மணி வரை , மாலை 4 . 00  முதல் இரவு 9 . 00 மணி வரை

Recent Post