ஏலக்காய் நல்ல நறுமணமிக்க மசாலா பொருள் மட்டுமின்றி அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. அஜீரண கோளாறு, வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம், குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலினுள் ஏற்பட்டுள்ள வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும். ஏலக்காயில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் வாய் துர்நாற்றத்தை நீக்கி வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காயை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் குடிப்பதனால் உடலில் பலவிதமான நல்ல மாற்றங்களைக் காணலாம். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
ஏலக்காய் நீரைத் தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி இறக்க வேண்டும். 1-2 ஏலக்காயை தட்டிப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் வடிகட்டி அந்த நீரை குடிக்கலாம்.
Also Read : வெந்தய தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
புற்றுநோய் செல்களை தடுக்கும்
புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், ஏலக்காய் நீரை அடிக்கடி குடித்து வரலாம். ஏலக்காய் உடலில் உள்ள நொதிகளை ஊக்குவித்து, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம்
ஏலக்காய் நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் உப்பை சிறுநீர் வழியாக வெளியேற்றும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் விளைவாக இரத்த அழுத்தமும் குறையும்.
கொலஸ்ட்ரால் குறையும்
ஏலக்காய் நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். ஏலக்காயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்க உதவும்.
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் ஏலக்காய் நீரைக் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவும்.