சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சின்ன வெங்காயத்தை சேர்ப்பது வழக்கம். சின்ன வெங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

சின்ன வெங்காயத்தை எப்படி தேனில் ஊற வைப்பது?

சின்ன வெங்காயத்தை தோலுரித்து அதனை ஒரு டப்பாவில் போடவும். வெங்காயம் மூழ்கும் அளவிற்கு தேனை ஊற்றி இரண்டு நாட்களுக்கு ஊற விடவும். பின் அதை தேனுடன் ஒரு ஸ்பூன் எடுத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.

Also Read : பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தொப்பையை குறைக்க 

தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதிலும் சின்ன வெங்காயம் சிறந்தது. மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.

நெஞ்சு சளியை நீக்கும்

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளியை சேரவிடாமல் பாதுகாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய்கள் உடலை தாக்காமல் இருக்க உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். அந்த வகையில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

Also Read : இந்த உணவுகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்..!

தூக்கமின்மை குறைபாடு

தினமும் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தேனில் ஊறவைத்த வெங்காயத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறைபாடு நீங்கும்.

இரத்தத்தை சுத்திகரிக்கும்

சின்ன வெங்காயம் இரத்ததில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வருவதால்  இரத்ததில் உள்ள நச்சுக்கள் எளிதாக வெளியேறும்.

Recent Post