தூங்கும்போது நமது மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

மூளையின் உச்சிப் பக்க மடல் (parietal lobe) கனவுகள் உருவாக அடிப்படைக் காரணமாக இருக்கக்கூடும். இந்த பகுதி சேதமடைந்தவர்கள் கனவுகளை அனுபவிக்க முடியாதது. நமது ஐம்புலன்களால் பெறப்படும் உணர்வுகள் மற்றும் தகவல்களை இந்த உறுப்பே ஒருங்கிணைக்கிறது.

இந்த பகுதி சேதமடைந்தவர்களுக்கு கனவுகள் வராததால், உச்சிப் பக்க மடலே கனவுகளை உருவாக்குவதற்கான அடிப்படையாகக் கருதப்படுகிறது. அதாவது, கண், காது, மூக்கு மூலம் கிடைக்கும் தகவல்கள் இந்த உறுப்புக்கும் கனவுகளுக்கும் அவசியம் என்பதும் தெளிவாகிறது. உறங்கும் போது, இந்த உச்சிப் பக்க மடல் பகுதி மட்டும் உறக்க நிலைக்கு செல்லாமல் தொடர்ந்து சமிக்ஞைகளை உருவாக்கி கொண்டிருக்கிறது.

Also Read : நல்ல தூக்கம் கிடைப்பதற்கு 10 எளிய வழிகள்!

அந்தச் சமிக்ஞைகளில் இருந்து மூளை ஒரு கதையை உருவாக்க முயற்சிக்கிறது இது தான் கனவுகளின் காரணமாகக் கூறுகிறது. மேலும், சில ஆராய்ச்சியாளர்கள், நமது குறுகிய கால நினைவுகள் நீண்ட கால நினைவுகளாக மாறும் செயல்முறையின் போது கனவுகள் உருவாகின்றன எனக் கூறுகின்றனர்.

இந்த செயல்முறையில் தேவையற்ற நினைவுகள் அழிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிர் பிழைக்க ஒத்திகை பரிணாமவியல் உளவியலாளர்கள், உயிர் பிழைத்திருப்பதற்கான சில செயல்பாடுகளின் விளைவாக கனவுகள் உருவாகின்றன எனக் கூறுகிறார்கள்.

இதன்படி, வாழ்க்கையில் உள்ள ஆபத்துகள் அல்லது நெருக்கடியான சூழ்நிலைகள் கனவுகளுக்குக் காரணமாக இருக்கலாம். நமக்கு வரும் ஆபத்தை எதிர்கொள்வதற்கான ஒத்திகையாகக் கனவுகள் இருக்கலாம் என்பது இவர்களின் வாதமாகும்.

Recent Post

RELATED POST