தொழில்முனைவோருக்கான நிதியுதவி வழங்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன. இதற்கான ஒரு முக்கிய திட்டமாக கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ தொடங்கப்பட்டது.
சிறு தொழில்களை ஆரம்பித்து தொழில் முனைவோர் ஆக முயற்சி செய்யும் நபர்கள், இந்த திட்டத்தின் மூலம் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கடன் பெற முடியும். குறிப்பாக, பட்டியல் பிரிவினர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இந்த திட்டம் உதவியாக அமைந்துள்ளது.
Also Read : தொழில் முனைவோர்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள்
சொந்த தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் தங்கள் சொந்த தொழிலை ஆரம்பிக்க 10-15 சதவீதம் டெபாசிட் செய்ய வேண்டும். மீதி பணத்தை ‘ஸ்டாண்ட் அப்’ இந்தியா திட்டத்தின் மூலம் பெறலாம்.
இந்த திட்டத்தின் பயன்களை பெற 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தொழில் தொடங்கி செயல்பட்டு வரும் பெண்களும் தங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்காக இந்த திட்டத்தில் விண்ணப்பித்து கடன் பெறலாம்.