அமோக வரவேற்பு…ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி பண்டிகை அன்று உலகம் முழுவதும் வெளியானது. இதில் சிவகார்த்திகேயன், மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாகசாய்பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் மொத்தம் ரூ.42.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

படம் வெளியான 2 நாட்களில் உலக அளவில் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடியை அமரன் படம் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Post