வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :
- கடலூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- திருவள்ளூர்
- விழுப்புரம்
- ராமநாதபுரம்
- திருச்சி
- புதுச்சேரி, காரைக்கால்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- சிவகங்கை
- புதுக்கோட்டை
- அரியலூர்
- கொடைக்கானல் ஒன்றியம்.