நாம் சாப்பிடும் சில உணவுகள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியாமலேயே சாப்பிட்டு வருகிறோம் அதில் ஒன்றுதான் இந்த மீள் மேக்கர். இந்த மீள் மேக்கர் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இதிலுள்ள சத்துக்கள் என்ன, குறிப்பாக ஆண்கள் இதை சாப்பிடலாமா, என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மீல் மேக்கர் சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள். இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது.
மீல் மேக்கர் என்பது ஒரு கம்பெனியின் பெயர். அவர்கள் இதனைத் தயாரித்து விற்றதால் இதற்கு மீல் மேக்கர் என்று பெயர் வந்தது.
சோயா பீன்ஸில் இருந்து பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. சோயா பால், சோயா சாஸ், சோயா எண்ணெய் ஆகியவை கிடைக்கிறது. அதில் குறிப்பாக சோயா பீன்ஸில் இருந்து எண்ணெய் தயாரித்த பிறகு அதிலிருந்து கிடைக்கும் கழிவுதான் இந்த மீல் மேக்கர்.
இதை பார்ப்பதற்கு இறைச்சி போல இருக்க வேண்டும் என்பதற்காக சிறு சிறு உருண்டைகளாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
1980 களில் திருமண நிகழ்ச்சிகளில் போடப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் இந்த மீல் மேக்கர் கலக்கப்பட்டது. இதனுடைய சுவை பிடித்துப்போக அனைவரும் அதனை விரும்பி வாங்க ஆரம்பித்தனர்.
மீல் மேக்கரை அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆண்கள் இதனை சாப்பிடும் போது அவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், மலட்டுத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது போன்ற பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவோடு சாப்பிடுவது அனைவருக்கும் நல்லது.