சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு

1953-ம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த சுஷ்மா சுவராஜ் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். சுஷ்மா சுவராஜ் சட்டப்படிப்பை முடித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். இந்திரா காந்திக்கு பிறகு இந்தியாவின் இரண்டாவது பெண் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் சுஷ்மா.

பாஜகவின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையும் சுஷ்மா சுவராஜுக்கு உண்டு. மக்களவையில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

எமெர்ஜென்ஸியை எதிர்த்து போராடிய சுஷ்மா, 25 வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சராக பதவி ஏற்றார். 1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார்.

டெல்லியின் முதல் பெண் முதல்வராக 1998 அக்டோபர் 12 முதல் டிசம்பர் 3 வரை பதவியில் இருந்தார். 1996,1998 மக்களவை தேர்தலில் டெல்லியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கர்நாடக மாநிலம் பெல்காம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

2000-ம் ஆண்டில் செப்டம்பரில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சராக பதவியேற்றார். 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி முதல் நவம்பர் 23ம் தேதி வரை இந்தியாவின் பொறுப்பு பிரதமராக பதவி வகித்தார்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக 2014 ம் ஆண்டு முதல் 2019 வரை பதவியில் இருந்தார். மேலும் ஒளிப்பரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவு என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.

அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், “நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்” என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார்.

2016-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் 2019 ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இரவு 11 மணியளவில் காலமானார்.

Recent Post

RELATED POST