அருண் ஜெட்லி 1952 டிசம்பர் 28 ஆம் தேதி பிறந்தார். தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதியும் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். 15-வது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 16-வது மக்களவையில் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார்.
மத்திய அரசு செயல்படுத்திய ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
1974இல் தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார். 1975 – 77 காலக்கட்டத்தில் இந்திரா காந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட போது, ஜெட்லி சிறைவாசம் சென்றார்.
1980 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த அருண்ஜெட்லி, பிறகு அதே ஆண்டு பாஜகவின் இளைஞர் அணி தலைவராகவும், டெல்லி பாஜக செயலாளராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
1999ஆம் ஆண்டு பாஜகவின் செய்தித் தொடர்பாளராக அருண் ஜெட்லி பொறுப்பேற்றுக்கொண்டார். பிறகு அதே ஆண்டில் வாஜ்பாய் தலைமையில் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2000ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இருந்து முதல்முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய செயலாளராக பதவி வகித்தார்.
2006 ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அருண்ஜெட்லி 2009 இல் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது அருண் ஜெட்லி அவருடன் நல்ல நட்புடன் இருந்து வந்தார். 2014 முதல் 2017 வரை பாஜகவின் ஆட்சி காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு அருண் ஜெட்லிக்கு சிறுநீரக கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி 2019 ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி காலமானார்.