காலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் வாழ்வில் மொபைல் மிகவும் முக்கிய அங்கமாக மாறியுள்ளது

அதாவது வீடியோ பார்ப்பதற்கு, பாடல்கள் கேட்பதற்கு, விளையாடுவதற்கு, அலாரம் வைப்பதற்கு போன்ற பலதரப்பட்ட வேலைகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுகிறது. மேலும் சிலர் தூங்குவதற்கு முன்பும், தூக்கத்திற்கு பின்பும் பார்க்கும் முதல் வேலை தங்களது மொபைல் என்ன வந்திருக்கிறது என்பதுதான். அதாவது Mail, Whatsapp chat போன்றவற்றை பார்க்கிறார்கள்.

தூங்கி எழுந்த பிறகு மொபைல் பார்க்கும் பொழுது தங்களது மூளையும், மனதும் புத்துனர்ச்சியாக இருக்காது. நேற்று இருந்த அதே மன அழுத்தம் தூங்கி விழித்த பிறகும் தொடரும், அதன் தொடர்ச்சியாக அன்றைய நாள் வேலை அனைத்தும் மன அழுத்தத்துடன் இருக்கும், மேலும் BP அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. இவை உடலுக்குத்தான் கேடு.

சரி, என்ன செய்யலாம்?

தூங்கி எழுந்த பிறகு முதலில் பார்க்க வேண்டியது மனதிற்கு எழுச்சியூட்டும் வார்த்தைகளை அல்லது அமைதியான இசை போன்றவற்றை கேட்டால் மனம் மிகவும் அமைதியாக இருக்கும். மேலும், மனம் மிகவும் அமைதியாக இருந்தால் அன்றைய சூழல் அனைத்தும் நன்றாகவே அமையும், எந்தவித மன அழுத்தம் இன்றி மனதும், மூளையும் ஆரோக்கியமாக செயல்படும். ஆரோக்கியமாக செயல்பட்டால் வாழ்வில் அனைத்தும் ஆரோக்கியமாகவே இருக்கும்.

Recent Post

RELATED POST