டெலிவிஷன் கம்ப்யூட்டர் போன்ற நவீன வசதிகள் பெருகப்பெருக கண் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. சிறு சிறு விஷயங்களில் கவனம் இருந்தால் கண்களை பாதுகாக்க முடியும்.
கண்களை தொட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு தொட வேண்டும்
கண்களில் தூசி விழுந்து நீண்டநேரம் ஆகியும் அகலாவிட்டாள் கண்களை எக்காரணத்தைக் கொண்டும் கசக்க கூடாது
அதிக வெயில் இருக்கும் நேரம் வெளியில் செல்ல வேண்டி இருந்தால் கண்களை பாதுகாக்க நல்ல தரமான குளிர்ச்சிதரும் கூலிங்கிளாஸ் பயன்படுத்துவது நல்லது. அடிக்கடி கண்களை குளிர்ந்த நீரால் கழுவுவது நல்லது
உங்கள் கண்களில் எந்தவித குறையும் இல்லாவிட்டாலும் கூட ஆண்டுக்கு ஒரு தடவை டாக்டரிடம் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இச்சோதனை கண்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் முன்கூட்டியே கண்டறிந்து அதனை தீர்க்க உதவும்.