உப்புமா உங்களுக்கு பிடிக்காதா??….இத மட்டும் ஒரு நிமிஷம் படிங்க

காலை உணவில் கண்டிப்பாக உப்புமா இடம்பிடித்திருக்கும், ஆனால் உப்புமானு சொன்னாலே அலறி அடிச்சிட்டு ஓடுவாங்க.  அந்த அளவிற்கு அனைவராலும் வெறுக்கப்பட்ட ஒரு  உணவாகத்தான் உப்புமா இருந்துவருகிறது. இதில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் கண்டிப்பா அசந்து போயிடுவீங்க.

உப்புமா என்ற பெயர் சொன்னாலே முகம் கோணல்மாணலாக போகும், அந்த அளவிற்கு ஒதுக்கப்பட்ட  உணவாகத்தான் உப்புமா இருக்கிறது. 10 நிமிடத்தில் செய்ய கூடிய உப்புமாவில் ஏராளமான நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது.  ரவா  உப்புமாவை உண்பதால் நம் உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெறுமாம் அதுமட்டுமல்லாமால் நரம்பு மண்டலங்களுக்கு பல நன்மைகள் செய்ய கூடியது  என்று கருதப்படுகிறது  .

உப்புமாவுடன் காய்கறிகளை சேர்த்து சமைக்கும் போது பல புரத சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.  உப்புமாவில் அதிகளவில் ப்ரோட்டீன் நிறைந்துள்ளதாம். அரிசி, கோதுமை, சேமியா என விதவிதமான வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் ரவையில்தான் உப்புமா செய்யப்படுகிறது. ரவை, எலும்பின் அடர்த்தியை அதிகரிப்பதோடு அதை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைக்க உதவும் என்று கூறப்படுகிறது. உப்புமாவை நாம் எடுத்துக்கொள்ளும் போது நாம் மிக சுறுசுறுப்பாக உணரமுடியும் என்று சுகாதார நிபுணர்கள் கூட கூறுகின்றனர்.

Recent Post

RELATED POST