காலை உணவுக்கு பதில் அல்லது பசி எடுக்கும்போது அதையே உணவாக சாப்பிடக்கூடிய பழங்கள் பட்டியலில் முன்னணி வகிப்பது வாழைப்பழம்.
வாழைப்பழத்தை மொத்தமாக பல வீடுகளில் வாங்கி வைப்பதுண்டு. Fridgeஇல் வைத்தால் உடனே எடுத்து சாப்பிட சிரமமாக இருக்கும் மற்றும் பழத்தின் தன்மையும் மாறுபட்டு விடும் என்பதால், வாழைப்பழம் சீக்கிரம் பழுத்து கருமை அடைவதை எப்படி தள்ளிப்போடுவது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
மொத்தமாக வாழைப்பழம் வாங்கும் போது சற்று காய்வாட்டாக வாங்கினால் அடுத்த சில நாட்களில் இயற்கையாக பழுத்த பழம் கிடைக்கும். மற்ற பழங்களுக்கு நடுவே வைத்தால் வாழைப்பழம் சீக்கிரம் பழுத்துவிடும். அதனால் வாழைப்பழத்தை தனியாக காற்றோட்டம் இருக்கும் வகையில் வைக்க வேண்டும்.
அதிகமான பழுத்த பழங்கள் இருந்தால் காற்று புகாத பைகளில் அடைத்து freezerகளில் வைத்து பிறகு பயன்படுத்தலாம். ஒரு பழுத்த வாழைப்பழத்துக்கு அருகில் இருக்கும் பழங்களும் வேகமாக பழுத்து விடும். எனவே, பழுக்கத் தொடங்கிய பழங்களை எடுத்து தனியாக வைத்து முதலில் பயன்படுத்தவும்.
வாழைப்பழத்தின் தண்டுமுனைப் பகுதியில் பிளாஸ்டிக் அல்லது அலுமினியம் foil போட்டு மூடினால் எத்திலின் வாயு வெளியேற்றத்தை தடுத்து பழம் பழுப்பதை தள்ளிப் போடுகிறது.
இந்த முறைகள் அதிகம் பழுத்து விடாத பழங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்றாலும், நன்கு பழுத்து, தோல் லேசாக brown நிறமாக மாறத் தொடங்கினால் Fridgeஇல் வைத்து பாதுகாப்பது நல்லது.