நெல்லிக்காயில் பல விதமான சத்துகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது, இது நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
தலைமுடி மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்தும், இதில் வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ளது போன்ற விஷயங்கள் எல்லாம் நமக்கு தெரிந்திருக்கும், ஆனால் நெல்லிக்காயில் இருக்கும் பக்கவிலைவுகள் குறித்தும், இதனை யார் எல்லாம் சாப்பிடவே கூடாது என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
லிவர் அதாவது கல்லீரல் சம்மந்தமான நோய் உள்ளவர்களுக்கு, நெல்லிக்காயில் உள்ள வைட்டமின்- சி சத்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். கால்லீரல் நோய் அல்லது ஆழற்சி பிரச்சனை உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையை பெற்றப் பிறகு நெல்லி ஜூஸை குடிக்கலாம்.
அதேபோல் சீறுநிரகம் அதாவது கிட்னி நோய் உள்ளவர்கள், நெல்லி ஜுஸ் குடிக்க கூடாது என்று சொல்லப்படுகிறது, ஏனென்றால் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் பண்புகள் நெல்லிக்காயில் இயற்கையாகவே உள்ளது. மேலும் இதில் உள்ள பையோ ஆக்டிவ் பெருட்கள், சீறுநிரக நோயாளிகளின் உடல் திசுக்களை சேதப்படுத்துகிறது என்றும் சொல்லப்படுகிறது.
கார்பிணி பெண்கள் நெல்லி ஜூசை குடித்தால் பல விதமான அஜிரண கோளாறுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது, இதனால் இந்த நபர்கள் நெல்லிக்காயை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸாக குடித்தாலோ பிரச்சனைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.