தினமும் ஒரு கேரட் சாப்பிடுங்க….உடலுக்கு கிடைக்கும் பல நன்மைகள்

நமது உடலுக்கு தேவையான பீட்டா கரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் கேரட்டில் அதிக அளவில் நிறைந்துள்ளன. கேரட்டில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் இதனை தினம் சாப்பிடும் போது உடலில் நீர்சத்துக் குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.

கண் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினசரி கேரட்டை எடுத்துக் கொள்ளலாம். கேரட்டில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மாலைக்கண் பிரச்சனை உள்ளவர்கள், வயது முதிவு காரணமாக பார்வை குறைபாடு ஏற்படுபவர்கள் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.

உங்களுக்கு அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தல் வேண்டுமென்றால் நீங்கள் கட்டாயமாக கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சூரிய ஒளியினால் ஏற்படும் கருமை நிறத்தை போக்குவதற்கும் கேரட் உதவுகிறது. சருமத்திற்கு பளபளப்பு தன்மையை பெறுவதற்கு கேரட்டை சாப்பிடுவது நல்லது.

தினசரி உங்கள் உணவுகளில் கேரட்டை சேர்த்துக் கொள்வதன் மூலம் முகப்பரு, அரிப்பு, தோல் அழற்சி, வறட்சியான சருமம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். 

Recent Post

RELATED POST