குண்டாக இருக்கும் ஆண்களுக்கு இந்த பிரச்சனைகள் வருமாம்

ஆண்கள் தங்கள் உடல்நலத்தைப் பற்றி கவலைப்வதில்லை. இதனால், அவர்கள் வயதாகும் போதெல்லாம் பல்வேறு நோய்களை அனுபவிக்க நேரிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை, உணவு முறை போன்றவை.

ஆண்களில் 40 வயதை கடந்த பிறகு தொப்பை, கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த உடல் பருமன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதுபோன்ற சில பிரச்சினைகளை இங்கே பார்ப்போம்.

Also Read : சோம்பை இப்படி பயன்படுத்துங்க….உடல் எடை வேகமாக குறையும்..!

இந்தியாவில், உடல் பருமனுடன் உள்ள ஆண்களில் 27% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும் போது ஏற்படுகிறது. வயிற்றுப் பருமன் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. இன்சுலின் பிரச்சனைகள் காரணமாக உடல் சரியான முறையில் செயல்பட முடியாமல் பருமன் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிக எடை கொண்டவர்கள் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இதய நோய்களை எதிர்கொள்ள வாய்ப்பு அதிகம். வயிற்றில் கொழுப்பு சேமிக்கப்பட்டால், அது இரத்த நாளங்களைத் தடுத்து, இதயத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தும், இதனால் பலவித நோய்கள் உருவாகலாம்.

இந்தியாவில் பருமனான ஆண்களில் 34.1% பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். வயிற்றுப் பருமன் இருதய அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது இரத்த அழுத்த பிரச்சினைகளை உருவாக்குகிறது. இதை கண்டுகொள்ளாமல் விட்டால் ஆபத்து அதிகரிக்கும்.

கீல்வாதம் என்பது கைகள், முழங்கால்கள், முதுகு மற்றும் கழுத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் பொதுவான மூட்டுப் பிரச்சனை. அதிக எடை கொண்ட ஆண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்பு அதிகம்.

Latest Articles