சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகளும் நேரங்களும்

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என்பது மட்டுமல்ல, தினமும் எண்ணெய், நெய்யின் உபயோகத்தையும் 2-3 தேக்கரண்டியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். குழம்பு, கூட்டு வகைகள் தாளிக்க மட்டுமே இதனையும் பயன்படுத்த வேண்டும்.

அரிசி மற்றும் அரிசி வகை உணவு பதார்த்தங்கள், தவிடு நிக்கி கோதுமை உணவுகளை அதிகம் சாப்பிடுவது மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதனால் தோசை, இட்லி, அவல், மைதா, ரவை, நூடுல்ஸ், சேமியா போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.

Also Read : சர்க்கரை வியாதிக்காரர்கள் செய்யக்கூடாதவை என்ன?

கோதுமைப் புட்டு, கோதுமை ரவை, கேழ்வரகு போன்றவைகளை அதிகம் சாப்பிடலாம். மதியமும் இரவில் தக்காளி, வெள்ளரிக்காய், பெரிய வெங்காயம், முட்டைக்கோஸ் போன்றவைகளை நறுக்கிப் போட்டு சாலட் தயாரித்து பசி நீங்கும் வரை சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த நேரத்தில் என்னென்ன சாப்பிடலாம்?

அதிகாலையில் பால் நன்றாகக் கொதிக்க வைக்கப்பட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்து பாலாடையை நீக்கிவிட்டு மறுநாள் காலையில் பருக வேண்டும்.) டீ, காபி ஏதாவது பருகலாம். பால்

காலை உணவு: கேழ்வரகு புட்டு அல்லது கோதுமைப் புட்டு, கடலைக் கூட்டுடன் சாப்பிடலாம்.

கேழ்வரகு அல்லது ஓட்ஸ் பாலில் காய்ச்சிப் பருகலாம். கேழ்வரகு தோசை, சப்பாத்தி, இரண்டு முட்டையின் வெள்ளைக்கரு, கோதுமை ரொட்டி போன்றவைகளையும் தேவைக்குத் தக்கவாறு சாப்பிடலாம்..

பகல் 12 மணி: சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு மணி நேரத்தில் பசி எடுப்பது இயற்கை, அந்த நேரத்தில் ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற ஏதாவது ஒரு பழத்தை சாப்பிடலாம்.

மதிய உணவு: ஒன்று அல்லது ஒன்றரை கப் சாதம் போதாது என்றால் ஒரு சப்பாத்தியும் சாப்பிடலாம்.

பருப்பு குழம்பு, சாம்பார், பயறு கூட்டு, சாலட், மீன் போன்றவைகளைச் சேர்க்கலாம். கோழி இறைச்சி ஒன்று அல்லது இரண்டு துண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

மாலை: ஒரு கப் டீ, 2 பிஸ்கெட் அல்லது ஒரு துண்டு ரொட்டி சாப்பிடலாம்.

6 மணிக்கு: ஒரு பழம் சாப்பிடலாம். தேவைப் பட்டால் ஒரு கப் பால் குடிக்கலாம். இரவு உணவின் தேவையைக் குறைப்பதற்காக இதனைச் சாப்பிடலாம்.

இரவு உணவு: சோறு சாப்பிட வேண்டாம். எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி அல்லது கோதுமை கஞ்சி சாப்பிடலாம்.

Recent Post

RELATED POST