கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் உடல் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. உடலின் உஷ்ணத்தை தணிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் பழங்கள் பெறும் பங்கு வகிக்கிறது. வெயில் காலங்களில் உடலின் சூட்டை தணிக்க உடலுக்கு ஏற்ற பழங்களை பற்றி பார்ப்போம்.
தர்பூசணி :
இந்த பழத்திற்கு தண்ணீர் பழம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதிக நீர் சத்து கொண்ட இந்த பழம் உடலின் சூட்டை வெகுவாக குறைக்கிறது. இதில் 94 சதவீதம் நீர் உள்ளது. இதில் பொட்டாசியம், வைட்டமின் எ மற்றும் சி அதிகம் நிறைந்துள்ளது. இதில் எந்த வித கலோரிகளும் இல்லாததால் இதயத்திற்கும், கண்ணுக்கும் நல்லது.
கிர்ணிப்பழம் :
தர்பூசணியை தொடர்ந்து கீர்ணிபழத்திலும் அதிக நீர் சத்து உண்டு. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பீட்டா கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் சி அலர்ஜிகளை சரி செய்வதோடு சருமத்தை பொலிவடைய செய்கிறது.
நாவல் பழம் :
நாவல் பழம் மற்ற பழங்களை போலவே ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறந்த பழம். இதில் 1.41 மில்லி இரும்பு சத்து, 15 மில்லி கால்சியம் மற்றும் 18 மில்லி வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம் இது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அந்தோசியனிகள் புற்று நோயை குணப்படுத்தும் திறன் உள்ளது.
மேலும், சில பொதுவான குறிப்புகள்
- கோடைக்காலத்தில் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது கட்டாயம்.
- வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள கைத்தறி, கதர் ஆடைகளை அணிய வேண்டும்.
- வெளியே செல்லும் போது கண்ணாடி, குடை ஆகியவற்றை பயன்படுத்துவதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மைக் பாதுகாத்துக் கொள்ள முடியும்
- வெட்ட வெளியில் வேலை செய்பவர்கள் தொப்பி அணிந்து கொள்ளலாம்.
- முடிந்தவரை வெயிலில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி வேலை செய்யும் பட்சத்தில், கூடுதல் ஓய்வு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து, மாலை மற்றும் இரவு நேரங்களில் செல்வது நல்லது.
- கோடை வெப்பத்தால் உடலுக்கு அதிக அளவில் நீர்ச்சத்து தேவைப்படும் என்பதால் எப்பொழுதும் கையில் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
- உடலுக்கு போதுமான நீர்சத்து தேவை என்பதால், உணவில் அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், பழச்சாறு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- உடலை குளிர்ச்சியாக வைக்க மோர், கூழ் ஆகியவற்றை அருந்தலாம். வறுத்த, காரமான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.
- உடல் வெப்பத்தை தணிக்க தினமும் 2 முறை குளிப்பது நலம் பயக்கும்.
- அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.
- முகத்தை அடிக்கடி நீரினால் கழுவுவதன் மூலம் வெயிலின் வறட்சியிலிருந்து காத்து கொள்ள முடியும்.