பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத் துண்டுகளை போட்டு வைத்தால் பல்லி தொல்லை நீங்கிவிடும். வீட்டின் இரவு விளக்கை பெரும்பாலும் நீல கலரில் வைத்திருங்கள். நீல நிற ஓளிக்கு கொசுக்கள் அதிகம் வராது.
எறும்புகள் வராமல் இருக்க மஞ்சள் பொடியை தூவிவிடுங்கள் எறும்பு வெகுதூரம் ஓடிவிடும்.
வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை தெளித்தால் ஈக்கள் தொல்லை இருக்காது.
அலங்கார பிளாஸ்டிக் பூக்களை சோப்புத் தண்ணீரில் கழுவாமல் ஷாம்புவினால் நன்கு அலம்பி காய வைத்தால், மனமாகவும் பூச்சிகள் அண்டாமல் இருக்கும்.
வேப்பெண்ணையை பஞ்சில் நனைத்து சுவாமி படங்கள் மற்றும் இதர படங்களை துடைத்தால் பூச்சிகள் அண்டாமல் பாதுகாக்கப்படும்.
மேஜை துடைக்கும் துணியில் சிறிது உப்பு அல்லது கற்பூரம் வைத்துத் துடைத்தால் மேஜையில் ஈ, பூச்சிகள் வராது.
வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கைப்பிடியளவு கருவேப்பிலை போட்டுவைத்து சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரால் வீட்டைத் துடைத்தால் எறும்பு உள்ளே வராது.
வீட்டின் அருகே துளசி செடிகள், தும்பைச் செடிகள் வளர்க்கலாம். இதனால் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வராது.
வீட்டுத் தரையை சுத்தப்படுத்தும் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு பிழிந்துவிட்டு அதன் பிறகு தரையை துடைத்தால் தரை பளிச்சென்று இருக்கும். சின்ன பூச்சிகள் கூட உள்ளே வராது.
சமையல் முடித்தவுடன் பேசின் நன்கு கழுவி விட்டு, பேக்கிங் சோடாவை அந்த இடத்தில் சிறிதளவு தூவினால் போதும். கரப்பான் பூச்சி வராது.
எலி வரக்கூடிய பீடத்தில் புதினா இலையை தூவி விட்டால் எலி வரவே வராது.
மூட்டைப்பூச்சி தொல்லை அதிகம் இருந்தால் வெங்காய சாற்றை தெளித்து விட்டால் போதும். அந்த வாசனைக்கு மூட்டைப்பூச்சி அழிந்து விடும்.