காலையில் சாப்பிடுவதற்கு சிறந்த உணவுகள் என்ன?

காலையில் டீ, காபி தவிர்ப்பது நல்லது. இதனை காலை உணவிற்கு பின்பு எடுத்துக்கொள்ளலாம். அதிகம் சர்க்கரை கலந்த உணவு, கேக் போன்ற உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.

பழங்களை வெட்டி சில துண்டுகள் காலை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் உடலுக்கு தேவையான நார்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் கிடைக்கும். முழு தானிய உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

அசிடிடி பிரச்சினை, வயிற்றில் புண், போன்ற பிரச்சினை உள்ளவர்கள் காலை உணவில் சமைக்காத தக்காளியினை தவிர்த்து விட வேண்டும். இல்லையெனில் இது அசிடிடியினை அதிகரிக்கச்செய்யும்.

முட்டையில் சிறந்த புரதம், நல்ல கொழுப்பு உள்ளதால் இது காலை உணவிற்கு சிறந்தது. இது உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்கும்.

தர்பூசணி காலை உணவிற்கு ஏற்றது. தர்பூசணி உடலுக்கு தேவையான நீர்சத்து தருகிறது. மேலும் இது நச்சு நீக்குதல், புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய் இவற்றிலிருந்து பாதுகாக்க தர்பூசணி சிறந்த பழம். தயிரில் பழங்கள். கொட்டைகள் சேர்த்து உண்ணலாம். இது நல்ல ஜீரணத்திற்கு உதவும்.

Recent Post

RELATED POST