குழந்தையின் கையை சுத்தம் செய்ய சானிடைசர் பயன்படுத்தலாமா?

நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால், நாம் வெளியில் செல்லும் போது பாதுகாப்பாக முககவசம் அணிந்து செல்லவேண்டும். வெளியில் சென்று வீட்டிற்கு வரும்போது கைகளை நன்றாக சோப்பு போட்டு 20 நொடிகள் நன்றாக கழுவ வேண்டும். அல்லது சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகள் சானிடைசர் பயன்படுத்தலாமா? கடந்த சில ஆண்டுகளாக சானிடைசர் பயன்படுத்திய குழந்தைகளுக்கு கண் எரிச்சல், வாந்தி, வயிற்று வலி மற்றும் இருமல் வந்துள்ளது. ஏனென்றால், குழந்தைகள் சானிடைசர் பயன்படுத்திய உடனே கைகளை கண்களிலோ அல்லது வாயிலோ வைத்து விடுகிறார்கள். இதனால்தான் இந்த பிரச்சனை.

சரி, சானிடைசர் பயன்படுத்தலாமா? வேண்டாமா?

எந்தவொரு மருத்துவ நிபுணர்களும் சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால், சானிடைசர் 60 சதவிகிதம் ஆல்கஹால் கொண்டவை, இதனை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது, அது முழுவதுமாக காய்ந்த பிறகு அவர்களை தனிமையில் விடுங்கள். முழுமையாக காய்வதற்குள் குழந்தைகள் கண் மற்றும் வாயில் கை வைப்பதால் மேலே கூறப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பெரியவர்களுக்கும் பொருந்தும்.

குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது?

  • மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பது சோப்பு போட்டு நன்றாக கை கழுவ வேண்டும் என்பதே. சோப்பும், தண்ணியும் கிருமிகளை சுத்தமாக அழித்து விடும்.
  • சோப்பு கிடைக்காத சமையத்தில் சானிடைசர் பயன்படுத்தலாம். ஆனால், குழந்தைகள் கை காயும் வரை அவர்களை கண்கானிப்பது அவசியம்.
  • பிறந்த குழந்தைகளுக்கு சானிடைசர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • எப்போதும் ஒரு பாட்டில் சானிடைசர் குழந்தைகளுக்காக தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • உங்கள் குழந்தை தவறுதலாக சானிடைசர் குடித்துவிட்டது என்றால், அவசியம் அருகிலுள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

Recent Post

RELATED POST