இரத்த தானம் பற்றிய தகவல்

மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின்போது 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும்.

18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம். ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்தத் தானம் செய்யலாம். இரத்தம் அளிப்பவரின் எடை 45 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

சீரான இடைவேளையில் இரத்த தானம் செய்தால், உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படாமல் இருக்கும்.

பெரும்பாலான ரத்த தானம் செய்வோர்க்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தானம் செய்த 20 நிமிடம் வரை எங்கேயும் நகராமல் ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்து இருக்க வேண்டும். மேலும், ஏதேனும் பழ சாற்றை குடித்தால் இந்த மயக்க நிலை சற்று மாறும்.

யாரெல்லாம் இரத்தம் தரக்கூடாது :

டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தவர்கள், சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் வரை ரத்தத் தானம் செய்யக் கூடாது.

மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரம் வரை ரத்தம் அளிப்பது தவறு
எச்.ஐ.வி., மஞ்சள் காமாலை தொற்றுள்ளவர்களின் ரத்தத்தைப் பெறக்கூடாது.
இதயநோய், காசநோய், வலிப்புநோய் உடையவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் எப்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது.

இரத்தம் எடுப்பவர்கள் செய்ய வேண்டியவை :

வழக்கம் போல் அவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும். மனதளவில் வலிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் . ரத்த பைகளை கவனமாக கையாள வேண்டும். இது போன்ற இரத்த தானம் செய்யும் போது நம் உடலில் புதிய இரத்த அணுக்கள் உருவாகி உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.

Recent Post

RELATED POST