ஆயிரம் நாட்களை கடந்து சாதனை படத்தை சிம்புவின் திரைப்படம்

கவுதம் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் ‛விண்ணைத்தாண்டி வருவாயா’. இப்படத்தில் சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காதலர் தினத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரீ-ரிலீஸ் ஆனது.  சென்னையில் உள்ள வி.ஆர்.மால், பிவிஆர் திரையரங்கில் காலை காட்சியாக மட்டும் இப்படம் தற்போது ஆயிரம் நாட்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. 

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படம் 800 நாட்களுக்கு மேல் ஓடியது. சந்திரமுகி படம் தான் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற வரலாற்றை வைத்திருந்தது. ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பிறகும் ஆயிரம் நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Recent Post

RELATED POST