ஆடி மாத வெள்ளியில் அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனை வழிபட்டு வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைக்கு என்றுமே ஒரு தனி சிறப்பு உண்டு.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஆடி மாத வெள்ளிக் கிழமையில் சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கம் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகளில் அம்மனையும் மகாலட்சுமியையும் வணங்கும் போது மாங்கல்ய பலம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டு வந்தால் மணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் மாலை நேரத்தில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். 108 அல்லது 1008 விளக்குகள் வைத்து பூஜை செய்வார்கள். அந்த நேரத்தில் சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், தேங்காய், துணி ஆகியவற்றைத் தருவது நலம் சேர்க்கும்.

அம்மனுக்கு படைக்கப்படும் வேம்பு, எலுமிச்சை, கூழ் ஆகியவை உடல் நலத்திற்கு நல்லது. வியாதிகளை குணப்படுத்தும்.

ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையன்று லட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்து வந்தால் வளங்கள் சேரும்.

இப்படிப் பல நன்மைகளை அள்ளித் தருவதால் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு நல்ல பலனை பெறுவோம்.

Recent Post