முதலைகள் பற்றி நீங்கள் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள்

முதலைகள் ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் பெரிய ஊர்வனவாகும்.

உலகத்திலேயே முதலைதான் அதிக வலிமையுடன் கடிக்கும் பிராணி என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. சிங்கம், புலியைவிட மூன்று மடங்கு அதிக வலிமையுடன் கடிக்க முடியும்.

முதலைகள் ஒரே நேரத்தில் 10 முதல் 60 முட்டைகள் வரை இடுகின்றன. குஞ்சுகள் பிறக்கும் போது 7 முதல் 10 அங்குலம் வரை இருக்கும். முதலைகள் சுமார் 30 ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றது. சில இனங்கள் 75 ஆண்டுகள் வரை வாழ்கின்றது.

முதலையின் கண்ணிலிருந்து வழியும் நீரானது கண்ணீர் அல்ல. அதன் உடலிலுள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்றுவதற்காக அதன் உடலிலிள்ள ஒரு சுரப்பி சுரக்கும் திரவமாகும்.

முதலைகள் மாமிச உணவுகளான இறைச்சியை மட்டுமே சாப்பிடுகின்றன. முதலைகள் வயிற்றில் உணவை அரைக்க சிறிய கற்களை விழுங்குகின்றன.

Recent Post

RELATED POST