நீர் யானை பற்றிய தகவல்கள்

உலகிலுள்ள விலங்குகளில் நீர்யானை மூன்றாவது பெரிய விலங்காக கருதப்படுகிறது. இதனுடைய பூர்வீகம் ஆப்பிரிக்கா வனப்பகுதி ஆகும்.

இது பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும். ஆனால் எதிரியை தாக்க ஆரம்பித்தால் மிக பயங்கரமாக தாக்கும்.

இதனுடைய எடை 1600 கிலோ வரை இருக்கும். இதன் உடலின் நீளம் 1.5 மீட்டர் வரை இருக்கும். நீர் யானைகளால் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்.

Advertisement

நீர் யானைகள் கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை. ஒரு கூட்டத்தில் 40 இருக்கும்.

நீர்யானைகள் 40 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும். பெண் நீர் யானைகளை விட ஆண் நீர் யானைகள் உருவத்தில் பெரியதாக இருக்கும்.

நீர் யானைகள் நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடியவை. பெரும்பாலும் அதிக நேரம் தண்ணீர் தான் இருக்கும்.

தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் போது அதனுடைய கண்கள் மற்றும் காதுகள் தண்ணீருக்கு வெளியே நீட்டியபடி இருக்கும். மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கும் போது தனது கண்கள் மற்றும் காதுகளில் மூடிக்கொள்ளும்.

நீர்யானைகளுக்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது. தண்ணீருக்குள் மூழ்கியே இருப்பதால் உடல் வெப்பம் ஏற்படுவதில்லை. நீர்யானை உடலின் தோல் பகுதியில் வறண்டுபோகாமல் இருக்க எண்ணெய் பசை போன்ற திரவம் சுரந்து கொண்டே இருக்கும்.

ஒரு நீர்யானை தனது வாயை 90 சென்டி மீட்டர் முதல் 170 சென்டி மீட்டர் நீளம் வரை திறக்கும். நீர்யானை தனது வாயை அகலமாக திறந்து காட்டினால் எதிரியுடன் சண்டை போட தயாராகி விட்டது என்று அர்த்தம்.

இரண்டு நீர்யானைகள் சண்டையிடும் போது எதிரி கீழே விழும் வரை அல்லது மரணமடையும் வரை சண்டையிடும்.

நாளொன்றுக்கு சராசரியாக 60 கிலோ எடையுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடும்.

பிரசவ காலத்தில் தாய் நீர்யானை தண்ணீருக்கு அடியில் தனது குட்டியை பிரசவிக்கும். நீர்யானையின் குட்டியின் எடை சுமார் 45 கிலோ வரை இருக்கும்.

சிங்கம், முதலை, கழுதைப்புலி போன்ற விலங்குகளால் குட்டி நீர் யானைகளுக்கு ஆபத்து ஏற்படுவதுண்டு.