சிட்டுக்குருவிகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ம் தேதி உலக சிட்டுக்குருவி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் தேவையை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை மார்ச் மாதம் 20-ந் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாக 2010-ம் ஆண்டு அறிவித்தது. சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை மிகக் கடுமையாகக் குறைந்து வருவதற்கு எண்ணற்றக் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். இவை 8 முதல் 24 சென்டிமீட்டர் நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும்.

இவை மனிதர்கள் இருக்கும் பகுதிகளில் வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன.

இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சில நகரங்களில் குறைந்து காணப்பட்டாலும், நாடு தழுவிய அளவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சீராக இருப்பதாக சொல்லப்படுகிறது.

உலகின் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் சிட்டுக்குருவிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அவை பல்வேறு பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்பதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால்தான் விளைபொருள்கள் பாதுகாக்கப்படுகின்றன.

மனிதர்களுக்கு பல்வேறு நோய்களுக்கு காரணமான கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளின் பங்கு அதிகம்.

சிட்டுக்குருவிகளின் ஒலியைக் கேட்பதால் மக்களின் மன அழுத்தம் குறைவதுடன், இயற்கையுடன் இணைந்து வாழும் மகிழ்ச்சியும் கிடைப்பதாக உளவியல் நிபுணர்கள் சொல்கின்றன.

செல்ஃபோன் கதிர்வீச்சு காரணமாக சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை.

சிட்டுக் குருவிகள் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகளில் கூடு கட்டிக் கொண்டு வாழும் இயல்பு கொண்டவை.  பருவநிலை மாற்றங்கள் மற்றும் மனிதனின் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தற்போது இவற்றின் கூடுகளையும் காணவில்லை. இப்பறவைகளையும் பார்க்க முடியவில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் சிட்டுக்குருவிகள் 60 சதவிகிதம் அழிந்துவிட்டது என அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவர தகவல் வெளியாகி உள்ளது. 13 ஆண்டுகள் ஆயுளை கொண்ட சிட்டுக்குருவிகள் தற்போது 5 ஆண்டுகளுக்குள் தனது வாழ்நாளை முடித்துக் கொள்கிறது.

Latest Articles