ஆமை பற்றிய தகவல்கள்

ஆமை ஊர்வன வகுப்பைச் சேர்ந்த விலங்கு வரிசை ஆகும். இதில் மொத்தம் 356 இனங்கள் அறியப்பட்டுள்ளன. உடலில் முதுகுப்புறம் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு ஒரு கவசம் போல் செயல்படுகிறது. ஆமை தரையில் மணிக்கு சுமார் 70 மீட்டர் வேகத்தில் நடக்கும்.

பொதுவாக உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் ஆமைகளு‌க்கு ‌நீ‌ண்ட ஆயு‌ள் உ‌ள்ளது. அத‌ன் இதய‌ம் ‌மிகவு‌ம் ‌நிதானமாக‌த் துடி‌ப்பதே அத‌ன் ‌நீ‌ண்ட ஆயுளு‌க்கு‌க் காரணமாக அமை‌கிறது. ஆமையின் உடல் உறுப்புகள் அவ்வளவு சீக்கிரம் பழுதாவது இல்லை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வெப்பமான இடங்களில் இருக்கக்கூடிய ஆமைகளை விட குளிரான பகுதிகளில் இருக்கக்கூடிய ஆமைகளின் ஓடுகள் மிக லேசாக மெல்லியதாக இருக்கும்.

ஓட்டின் மேல் பகுதி கார்பேஸ் என்றும் அடிப்பகுதி பிளாஸ்ட்ரான் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. கடினமான தாடைகளை பயன்படுத்தி உணவை மென்று சாப்பிடுகிறது.

ஆமைக‌ள், கரு‌த்த‌ரி‌த்தது‌ம், கட‌ற்கரையை நோ‌க்‌கி கூ‌ட்டமாக பய‌ணி‌க்க‌த் துவ‌ங்கு‌ம். அங்கு ம‌ண்‌ணி‌ல் கு‌ழி தோ‌ண்டி மு‌ட்டைகளை இ‌ட்டு‌வி‌ட்டு செ‌ன்று‌விடு‌கி‌ன்றன. ஒ‌வ்வொரு கட‌ல் ஆமையு‌ம் ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும்.

கடல் மற்றும் நன்னீரில் வாழும் ஆமைகளே நிலத்துக்கும் நீருக்கும் இடையில் பாலமாக விளங்குகின்றன.

ஆமைகள் பகலில் சுறுசுறுப்பாக இரை தேடும். நன்கு வளர்ந்த ஆமைகள் பொதுவாக நீர்வாழ் தாவரங்களை உண்கின்றன.

ஆசியாவின் சில பகுதிகளில் சில ஆமை இனங்களின் உறுப்புகள் மருத்துவ குணங்கள் கொண்டவை என நம்பப்படுகிறது. இதனால் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானவை வேட்டையாடப்படுகிறது.

Recent Post

RELATED POST