இத்தளத்தை பற்றி படிக்க வந்த உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.

இணையதளம் தொடக்கம்

Tamilxp இணையதளம் மார்ச் 4 2018 அன்று இரண்டு சகோதரர்களால் துவங்கப்பட்டது. இந்த இணையதளம் துவங்குவதற்கு முன் பலதரப்பட்ட இணையங்களை துவங்கி அதில் பலதரப்பட்ட புதிய அனுபவங்களை பெற்றுள்ளோம்.

நோக்கம்

இந்த தளத்தின் நோக்கமே, இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தமிழில் இருக்க வேண்டும் என்பதே. தற்போது, நாம் ஏதேனும் கேள்விக்கு விடை தேடினால் அது பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் தமது தாய்மொழியில் படிக்கும் அளவுக்கு ஒரு புரிதல் இருக்காது.

அதற்கு முதல் படியாக மருத்துவம், யோகா, சினிமா செய்திகள், சினிமா படங்கள், வாழ்வியல் கட்டுரை போன்றவர்களை தற்போது தமிழில் கொடுத்து வருகிறோம்.

மருத்துவ குறிப்புகள் அதிகாரப்பூர்வ மருத்துவர் எழுதிய அல்லது பேசிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

வருமானம்

தற்பொழுது வருமானத்திற்காக Adsense போன்ற நிறுவனங்களில் மூலம் வருமானம் எடுத்து வருகிறோம். (தற்போது மிக மிக குறைவாக வருமானம் இருக்கிறது. ஒரு நாள் இத்தளம் எங்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் என்ற நம்பிக்கையில் உழைத்து வருகிறோம்.)

நீங்களும் எங்களுடன் கை கோர்க்கலாம்

நாங்கள் உங்களிடம் கேட்பது பணம் அல்ல, உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களை தமிழில் இத்தளத்தில் நீங்கள் பதிவிடலாம். அந்தத் தகவல் கண்டிப்பாக உண்மையாக இருக்க வேண்டும்.

எங்களுக்கு இந்த ஐடி (tamilxp(at)outlook.com) மூலம் மின்னஞ்சல் அனுப்பலாம்.

நன்றி.