கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஏ.சி ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஏ.சியின் பயன்பாடு அதிகரிக்கும் போது அது சருமத்தில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். இதனால் உங்களுடைய சருமம் வறட்சி அடையும்.
இன்றைய காலக் கட்டத்தில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஏ.சியின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. எனவே சரும பிரச்சனைகள் வராமல் தடுக்க அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஏ.சியில் இருப்பவர்கள் அறையை மிதமான வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும். ஏ.சியில் இருக்கும் பில்டரை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சிலர் ஆண்டுக்கணக்கில் ஏ.சியை சுத்தம் செய்யாமல் வைத்திருப்பார்கள். இதனால் நுண்கிருமிகள் பரவி சுவாசக் கோளாறு, தலைவலி, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் சரும வறட்சி பிரச்சனையை அதிகம் எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் அதிகமாக ஏ.சியை பயன்படுத்துவது உடல் நலக் கோளாறை அதிகப்படுத்தி விடும். ஏசியை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே நன்மைகளை அனுபவிக்க முடியும்.