நடிகர் ரஜினிகாந்த் பற்றிய சில தகவல்கள்

தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் 12 -12 -1950 அன்று பெங்களூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் சினிமாவிற்காக ரஜினிகாந்த் என பெயர் மாற்றம் செய்தார்.

ஆரம்பகாலத்தில் சிவாசி அலுவலக உதவியாளராகவும், தச்சராகவும் வேலை பார்த்தார். ஓர் இடத்தில் மூட்டை தூக்கும் வேலை பார்த்தார். இதற்கு சம்பளமாக ஒரு மூட்டைக்கு 10 பைசா கொடுக்கப்பட்டது.

1975ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ரஜினிகாந்த் இயக்குனர் பாலசந்தரிடம் நான் நல்ல வில்லனாக வர வாழ்த்துமாறு கேட்டாராம். ஆனால் அவர் நீ பெரிய ஹீரோவாக வருவாய் என்று வாழ்த்தி உள்ளார்.

பின்னர் பாலசந்தர் தன்னுடைய மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள் ஆகிய படங்களில் கதாநாயகன் வேடம் கொடுத்தார். படிப்படியாக ரஜினி முன்னேறினார்.

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி படத்திற்கு 26 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். இதனை அடுத்து ஆசியாவிலேயே நடிகர் ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். 2000 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது. 2016 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது.

பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்த ரஜினி தனது நண்பரின் ஆதரவால் சென்னைக்கு நடிக்க வந்தார். ஆரம்பத்தில் வில்லனாக நடித்த ரஜினி பிறகு குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். பைரவி படத்தில் நடித்தபோது அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு வால் அவருக்கு வைக்கப்பட்ட பட்டமே சூப்பர்ஸ்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து 18 படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் எஸ் பி முத்துராமன் ரஜினியை வைத்து 25 படங்களை இயக்கியுள்ளார்.

“ஸ்ரீ ராகவேந்திரர்” படம் ரஜினிகாந்தின் 100வது படமாகும். இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த “படையப்பா” படம் ரஜினிக்கு 150வது படமாகும்.

ரஜினிக்கு மகளாகவும் ஜோடியாகவும் நடித்த ஒரே நடிகை மீனா மட்டுமே.

ரஜினியுடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ரீபிரியா.

நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 41 விருதுகளை பெற்றுள்ளார்.

Recent Post

RELATED POST