அடிவயிற்று கொழுப்புகள் குறையணுமா? இதை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

அடிவயிற்றுப் பகுதிகளில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை எப்படி குறைக்கலாம் என்று பார்ப்போம்.

அடிவயிற்றில் கொழுப்புகள் தேங்காமல் இருக்க வேண்டுமென்றால் அன்றாட உணவில் அதிக அளவு நார்ச்சத்து கொண்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

தினசரி உணவில் குறைந்தபட்சம் 18 சதவீதம் அளவுக்கு பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இயல்பாகவே உடலில் நார்ச்சத்தின் அளவும் அதிகரிக்கும்.

அன்றாட உணவில் பாதாம், வால்நட் இருக்கும்படி பாா்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் அடிவயிற்றில் தேங்கும் கொழுப்பு குறையும். மேலும் உடலும் மனமும் சோர்வடையாமல் இருக்கும்.

ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியம். தூக்கம் சரியாக இல்லையென்றால் தொப்பை உருவாகும்.

ஆல்கஹால் அதிகமாக எடுத்துக் கொண்டால் தொப்பை அதிகரிக்கும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.

Recent Post

RELATED POST