முன்னுரை:-
உடற்பயிற்சி செய்து முடித்ததும் என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த கட்டூரையில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
விளக்கம்:-
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் உட்கார்ந்து செய்யும் வேலை செய்து வருகின்றனர். இதன்காரணமாக, அவர்கள் உடல் நலனில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
எனவே, உடற்பயிற்சி செய்வதை பலரும் கட்டாயமாக்கி வருகின்றனர். இந்நிலையில், உடற்பயிற்சி செய்து முடித்ததும் செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.
3 விஷயங்கள்:-
1. ஸ்ரெட்சிங்
2. குளியல்
3. உணவு
ஸ்ரெட்சிங்:-
தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, உடல்தசைகள் மிகவும் இறுக்கமாகிவிடும். எனவே தசைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டுமானால், நாம் ஸ்ரெட்சிங் செய்ய வேண்டும்.
குளியல்:-
தீவிர உடற்பயிற்சி செய்தால், கண்டிப்பாக வியர்வை உடல் முழுவதும் ஏற்பட்டிருக்கும். சோம்பேறித்தனமாக அப்படியே இருந்து விடாமல், குளித்துவிடுங்கள். குளிக்கவில்லையென்றால், வியர்வையில் இருக்கும் பாக்டிரியாக்கள் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தரும்.
உணவு:-
தீவிரமாக உடற்பயிற்சி செய்தால் கண்டிப்பாக பசி எடுக்கும். அதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல், கலோரிகள் குறைவாக உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட பழக்கிக்கொள்ளுங்கள்.