கற்றாழை உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தது. இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்பதை மறக்கக் கூடாது.
கற்றாழையை அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தினால் சரும அலர்ஜி ஏற்படும். மேலும் சொறி, அலர்ஜி, தோல் சிவத்தல், தோல் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
உடல் எடையை குறைப்பதற்காக சிலர் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் சாப்பிட்டு வருகின்றனர். இதனால் நீர்ச்சத்து குறைபாடும் ஏற்படலாம். பதட்டம், குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
கற்றாழை சாற்றை அளவுக்கு மீறி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். கற்றாழை சாற்றில் மலமிளக்கியான ஆந்த்ராகுவினோன் என்ற திரவமும் உள்ளது. இதன் காரணமாக உங்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
கற்றாழை சாற்றை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உங்கள் உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் பலவீனமாக உணர்வீர்கள். எனவே கற்றாழையை அளவோடு பயன்படுத்துவது நல்லது.