ஓஹோ இதுதான் விஷயமா!!! இதனாலதான் மாத்திரைகளை அலுமினியம் அட்டையில் பேக்செய்து விற்கிறாங்களா?

தற்போதைய சூழலில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் பலருக்கும் உள்ளது. இதற்கு, பெரும்பாலானோர் மருந்து கடையிலேயே தங்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். இதனால், ஏற்படக்கூடிய விளைவுகள் பலருக்கும் தெரிவதில்லை. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாம் எடுத்து கொள்ளும் மருந்துகள் ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த ஒரு மாத்திரையையும் சாப்பிட வேண்டாம்.

இந்நிலையில், நாம் அன்றாடம் உட்கொள்ளும் மாத்திரைகளை ஏன், எதற்காக அலுமினியம் அட்டையில் பேக் செய்து விற்பனை செய்கிறார்கள் என்கிற  கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். இதுகுறித்தான கூடுதல் விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மாத்திரைகளின் பாதுகாப்புக்கும், அதன் வீரியத்துக்கும் முக்கியமான பாதுகாப்பை பேக்கேஜ் மெட்டீரியல்கள் வழங்குகின்றன. தயாரிக்கப்படும் மாத்திரைகளில் கலப்படங்கள் சேர்ந்துவிடுவதை தடுக்கவும், மருந்துகளின் ஆயுளை அதிகரிக்கவும் மற்றும் பாக்கெட்கள் சேதமடைவதைத் தவிர்க்கவும் பார்மாசூட்டிகல்(Pharmaceutical) துறையில் பேக்கிங் மெட்டீரியல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளின் பேக்கேஜிங்கில் அலுமினியத் தாளைப் பயன்படுத்துவது வழக்கமாக நடந்துவரும் ஒன்றாகும்.  பேக்கேஜிங்கில் ஏதேனும் சேதங்கள் இருப்பின் அது மாத்திரையின் வீரியத்தை குறைத்துவிடும். இதனால், எதற்காக அந்த மாத்திரையை உட்கொள்கிறோமோ அதற்கான பலன் கிடைக்காமல் போய்விடும். இதனால், அந்த நோய் முற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

அலுமினியம் தாளை அதிலிருக்கும் தனித்துவ தன்மைக்காக மாத்திரைகளை பேக் செய்ய தேர்ந்தெடுக்கிறார்கள். காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அலுமினிய தாளை பாதிக்காது. இதுமட்டுமல்லாது, அல்ட்ரா வைலட்  rays, நீராவி (steam), oil, கொழுப்பு, oxygen போன்றவற்றாலும் அலுமினிய தாளை எதுவும் செய்யமுடியாது.

அலுமினியத் தகடு, அலுமினிய கேன்கள் மற்றும் பிற அலுமினிய பேக்கேஜிங் பொருட்களை முழுமையாக மறுசுழற்சி செய்து எண்ணற்ற முறையில் மீண்டும் பயன்படுத்தலாம்.

குறிப்பாக, அலுமினியப் பொருட்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அதிக வெப்பநிலை, அமில உணவு ஆகியவற்றுக்கு அலுமினியத்தைத் தவிர்ப்பது முக்கியம். அலுமினிய பேக்கேஜிங்கில் உள்ள நன்மைகள் என்று பார்த்தால் அலுமினியம் பேக்கேஜிங் நீண்ட காலத்துக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஒளியிலிருந்து பாதுகாப்பு தரும். இதுமட்டுமல்லாது மிகவும் இலகுவானது, நீர்ப்புகாது. மேலும் அலுமினியம் அட்டைகளில் மருந்துகளின் விவரங்களை அச்சிடுவது எளிது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Post

RELATED POST