ஆமணக்கு விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் விளக்கெண்ணெய் என்றும் கூறுவார்கள். இந்த எண்ணெய் மூட்டு வலி, கீல் வாதம் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் castor oil என அழைப்பார்கள்.
வெண்மையான சருமம்
ஆமணக்கு எண்ணெயுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் வெண்மையான சருமம் கிடைக்கும்.
உதடுகளில் வெடிப்புகள்
உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் விரிசல்களை சரிசெய்ய இந்த ஆமணக்கு எண்ணெய் பயன்படுகிறது.
கருவளையங்கள்
கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் மறைவதற்கு தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் ஆமணக்கு எண்ணெயை எடுத்து கருவளையங்கள் உள்ள இடத்தில் மசாஜ் செய்யவும். காலையில் முகத்தை கழுவி விட வேண்டும். இதனை தொடர்ந்து செய்தால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மறைந்துவிடும்.
மூல நோய்கள்
அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் 50 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் தீரும்.
மஞ்சள் காமாலை
ஆமணக்கு இலை, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் அதிகாலையில் எலுமிச்சம்பழம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் முற்றிலும் குணமாகும்.
மூட்டு வலி
மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் விளக்கெண்ணெயை லேசாகச் சூடு செய்து மூட்டு இருக்கும் பகுதிகளில் மசாஜ் செய்து வந்தால், மூட்டுகளில் உராய்வை தடுத்து வலியையும் குறைக்கும்.
ஆமணக்கு இலை பயன்கள்
ஆமணக்கு வேரை அரைத்துச் சாப்பிட்டால் குடல் கிருமிகள், மலக் கிருமிகள் போன்றவை ஒழியும்.
ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் தீராத மலக்கட்டு குணமாகும்.
ஆமணக்கு எண்ணெய்யுடன் (அரை லிட்டர்), கடுக்காய் (60 கிராம்) சேர்த்துக் காய்ச்சி, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் மூல நோய்கள் அனைத்தும் தீரும்.
ஆமணக்கு இலை, கீழாநெல்லி இலை – இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, எலுமிச்சம் பழம் அளவுக்கு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.