மாபெரும் வெற்றி…7 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்..!!

ராஜ்குமார் பெரியசாமி  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் கடந்த வாரம் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியானது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடித்திருந்தார். 

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் செய்து வருகிறது. படம் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில் படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் உலகளவில் ரூ. 180 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் 7 நாட்களில் ரூ. 89.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. 

Recent Post