ரிலீஸ் ஆவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் அமரன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து வெளிவந்த அமரன் படத்தின் ட்ரைலர் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் அமரன் படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. இதுவரை வெளிநாட்டு ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 50 லட்சத்திற்கும் மேல் அமரன் படம் வசூல் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Recent Post

RELATED POST