நம் உடலில் எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருக்கிறதோ அதை பொறுத்துத்தான் நம் உடலும் செயல்படுகிறது.
சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகத்தான் இருக்கும் இதனை நம் உணவு முறையை வைத்தே சரி செய்ய முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் கேரட், பச்சைக்காய்கறிகள், தக்காளி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் ஆகியவை முக்கிய இடத்தை பிடிக்கிறன என சொல்லப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் தினமும் இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுடன் 1 டம்ளர் பழசாறு குடித்தால் பாக்டீரியாவின் செயல்பாட்டை அதிகரிக்குமென சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து உணவுகள் மட்டுமல்ல சில மூலிகைப் பொருட்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது மஞ்சள், பூண்டு , சோம்பு ஆகியவற்றை கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.