அம்மான் பச்சரிசி இலையின் மருத்துவ பயன்கள்

அம்மான்பச்சரிசி மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகையாகும். இந்த மூலிகையின் இலைகள் கூர்மையாக இருக்கும். இந்த மூலிகையில் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது.

பொதுவாக காய்கறி, பழங்களை விட மூலிகைகளில் பல மடங்கு மருத்துவ உள்ளது. அந்த வகையில் அம்மான் பச்சரிசி இலையின் மருத்துவ பலன்களை பற்றி பார்ப்போம்.

தாய்ப்பால் சுரக்க

அம்மான் பச்சரிசியின் பூக்களை 40 கிராம் அளவு எடுத்து நன்றாக அரைத்து பாலில் கலந்து ஐந்து நாட்களுக்கு கொடுத்து வந்தால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

உடல் சூடு தணிய

அம்மான் பச்சரிசி இலைகளை பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து சட்னி தயாரித்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும். மலச்சிக்கலை தடுக்கும்.

குடல் அல்சர்

அம்மான் பச்சரிசி இலை, பாசிப்பருப்பு இரண்டையும் நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் குடல் அல்சர் குணமாகும்.

ரத்தம் சுத்தமாகும்

அம்மான் பச்சரிசி இலையுடன் மிளகு, 3 வேப்பிலை சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

வெண்குஷ்டம்

அம்மான் பச்சரிசி கீரையுடன் கிழாநெல்லி மற்றும் வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலையிலும் மாலையிலும் 15 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் குணமாகும்.

வாய்ப்புண்

அம்மான் பச்சரிசி இலையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். வாய் மற்றும் நாக்கு பகுதிகளில் உருவாகும் வெடிப்புகள் நீங்கும்.

டெங்கு காய்ச்சல்

100 கிராம் அம்மான்பச்சரிசி இலையை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதனை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 100 மில்லி லிட்டர் வீதம் பருகி வந்தால் டெங்கு காய்ச்சல் குணமாகும்.

Recent Post

RELATED POST