அம்மிக்கல்லில் சட்னி செய்தால் இவ்வளவு நன்மையா..?

பண்டைய காலங்களில் இருந்தே, நம் நாட்டில் சட்னி என்ற உணவு மிகவும் பரவலாக இருந்து வந்துள்ளது. பல வகைகளில் இந்த சட்னி என்ற உணவு இருந்துள்ளது. விழுது, சுண்டாங்கி, அரைப்பு என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட சட்னி, உடலுக்கு வலிமையையும், நாவிற்கு சுவையையும் அளித்தது. ஆனால், தற்போது மிக்ஸியில் செய்யப்படும் சட்னியில், அந்த சத்துக்கள் கிடைப்பதில்லை.

என்ன தான் பழைய மூலப் பொருட்களை கொண்டு, சட்னி தற்போது தயாரித்தாலும், மிக்ஸியில் அரைப்பதால், அதன் சத்துக்கள் கரைந்துவிடுகின்றன. சரி அம்மிக்கல்லில் சட்னி செய்வதால் ஏற்படும் நன்மைகளை தற்போது பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியம்:

அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்ற பழங்கால பொருட்களை கொண்டு, குழம்பு வகைகள், சட்னி போன்ற உணவுகளை செய்யும்போது, மனமாகவும், சுவையாகவும் இருக்கும். இதுமட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும், அம்மிக்கல்லில் உணவு சமைப்பது சிறந்தது. ஆனால், உடல் உழைப்பு காரணமாக, யாரும் தற்போது செய்ய முடிவதில்லை. உங்களுக்கு நேரமும், உடல் வலிமையும் இருந்தால், ஆட்டுக்கல்லை பயன்படுத்துங்கள்.

சுவை:

நீண்ட காலமாக ஒரு உணவுப் பொருள் நம்மிடையே பயணம் செய்துக் கொண்டு வருகிறது என்றால், அதன் சுவை தான் அதற்கு காரணம். ஆனால், தற்போது மின்னனு கருவிகளின் மூலம், நம் செய்யும் சட்னி, அதன் இயற்கை சுவையை கெடுத்து விடுகிறது. எனவே, சட்னியின் முழுமையான சுவையை பெறுவதற்கு ஆட்டுக்கல்லை பெறுங்கள்.

உடற்பயிற்சி:

ஆட்டுக்கல்லில் உணவுகளை அரைப்பதால், அது நமது உடலின் கொழுப்பை குறைப்பதற்கு நன்கு உதவி புரியும். அதற்காக, தினமும் எதையாவது போட்டு ஆட்டு உரலில் அரைத்துக் கொண்டிருக்க தேவையில்லை. தேவையான சமயங்களில் மட்டும் செய்தால் போதும்.

காலை நேர உணவுகள் மட்டுமின்றி, மதிய நேர உணவு வகைகளிலும், சட்னியை நாம் பயன்படுத்துவது சிறந்தது. எனவே, முறையான வழியில் சட்னி செய்து, நாவிற்கு மேலும் சுவையூட்டுங்கள்.

Recent Post