அமுக்கிராவுக்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி ஆகிய வேறு பெயர்கள் உண்டு. இதன் இலைகள் முட்டை வடிவம் கொண்டவை.
சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும். இதில் சீமை அமுக்கிரா கிழங்கு உடல் மலட்டுத்தன்மையை நீக்கும். விந்தனுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.
அமுக்கிரா கிழங்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிணிகள், உடல் வியாதிகள், சிறுநீர் நோய்கள், வாத நோய்கள், குழந்தைகளின் வளர்ச்சியின்மை, பலவீனங்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
அமுக்கிராக் கிழங்கு பக்கவிளைவுகள் இல்லாத மிகவும் பயனுள்ள ஒரு மூலிகை கிழங்கு, என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமுக்கிரா கிழங்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. நாள்பட்ட கல்லீரல் நோய்களையும் குணப்படுத்துகிறது.
அமுக்கிரா கிழங்கை குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக கொடுப்பதால் அவர்களின் திடகாத்திரமான வளர்ச்சிக்கு பயன்படுகிறது. அமுக்கிரா வேரை நிழலில் உலர்த்தி, காய வைத்து பொடியாக்கி, 5 கிராம் எடுத்து, சிறிது தேனுடன் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால், சளி கரைந்து, கபவாத காய்ச்சல் குணமாகும்.
அமுக்கிரா சூரணத்தைப் பாலில் கலந்து வீக்கம், படுக்கைப் புண் உள்ள இடத்தில் தடவினால், புண் விரைவில் ஆறும். அமுக்கிரா கிழங்கின் கஷாயத்தை இளஞ்சூட்டில் நெய் பக்குவம் செய்து மாதவிடாய்காலத்தில் சாப்பிட்டு வந்தால், மலடு நீங்கி பிள்ளைப்பேறு உண்டாகும்.